காலிஃப்ளவர் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 1

சின்ன வெங்காயம் - 7

தக்காளி - 1

கொத்தமல்லித் தழை - சிறிது

கறிவேப்பிலை - 2 இணுக்கு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

சீரகம் - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பட்டை - சிறு துண்டு

கிராம்பு - 4

வரமிளகாய் - 4

தனியா - 2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 1 கப்

கறிவேப்பிலை - 2 இணுக்கு

சிறிய தேங்காய் - ஒரு மூடி

இஞ்சி - சிறு துண்டு

பூண்டு - 4 பற்கள்

மஞ்சள் - சிறு துண்டு

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய்

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைக்கவும். அதில் பெரிய துண்டுகளாக நறுக்கிய காலிஃப்ளவரை நன்கு அலசிவிட்டு போட்டு வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சீரகம், சோம்பு, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, வரமிளகாய், தனியா, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கி ஆறவைக்கவும். தேங்காயை துருவிக்கொள்ளவும். இஞ்சி ,பூண்டு மற்றும் மஞ்சளில் தோலை நீக்கி வைக்கவும்.

ஆறிய வெங்காயக் கலவையுடன் தேங்காய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு வைத்துள்ள காலிஃப்ளவரை எடுத்து நீரை வடித்துவிட்டுச் சேர்த்து வதக்கி, வெங்காயக் கலவையைச் சேர்க்கவும்.

நன்கு கிளறிவிட்டு தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் குக்கரை மூடி மேலே ஆவி வந்தவுடன் வெயிட் போடவும். 4 விசில் வந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

இட்லி, தோசை, கைக்குத்தல் அரிசி சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.