காராமணி குழம்பு
தேவையான பொருட்கள்:
முளைக்கட்டிய வெள்ளை காராமணி - 1/4 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
தக்காளி - 1
கத்தரி, வாழை, உருளை, முருங்கை - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
புளி - தேவையான அளவு
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
வேக வைத்த துவரம் பருப்பு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய், கடுகு, சீரகம், கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம் கறிவேப்பிலை கொத்தமல்லி - சிறிது
சாம்பார் பொடி செய்ய:
காய்ந்த மிளகாய் - 1/2 கப்
தனியா - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இனுக்கு
பச்சரிசி - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை:
காய்கள், வெங்காயம், காராமணி, தக்காளி, சாம்பார் பொடி, 2 பல் பூண்டு சேர்த்து வேக விடவும்.
பாதி வெந்ததும் புளிக் கரைசல், உப்பு சேர்த்து வேக விடவும்.
புளி சேர்த்து கொதி வந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
காய்கள் வெந்து வரும் போது, துவரம் பருப்பை சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, நசுக்கிய மீதி பூண்டு போட்டு தாளிக்கவும்.
தாளித்தவற்றை குழம்பில் சேர்த்து, கொத்தமல்லி தூவி ஒரு கொதி வரும் வரை கொதிக்க வைக்கவும். மேலும் கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சாம்பார் பொடி:
தனியாவை சிவக்க வறுக்கவும்.
காய்ந்த மிளகாயை சிறுதீயில் வறுக்கவும்.
மிளகு, சீரகம், வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை ஆகியவற்றை வறுக்கவும்.
துவரம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
கடலை பருப்பு, உளுந்து, பச்சரிசி சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவற்றை நன்கு சூடு போக ஆற விடவும்.
பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து அவரவர் தேவைக்கு ஏற்ற பதத்தில் திரிக்கவும். மணமான சாம்பார் பொடி தயார்