காராமணிக்கடைசல்
தேவையான பொருட்கள்:
காராமணி/பயிறு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 10
அல்லது பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
சீரகம் - அரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் காராமணிப் பயிறை முதல் நாள் இரவே ஊறவைத்து குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயமாக இருந்தால் கூடுதல் சுவை அல்லது பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டையும் சீரகத்தையும் ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
பச்சை வாசனை போனதும் தட்டிய பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கிய பின் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.
அதனுடன் மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி வேகவைத்த பயிறை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
பிறகு தீயைக் குறைத்து விட்டு ஒரு மேஷரால் அல்லது மத்து கொண்டு நன்கு பயிறை மசித்து விட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்க விட்டால் குழம்பு இறுகி கெட்டியான கிரேவியாக வரும். மிகவும் சுவையான குழம்பு தயார்