காரக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 6 பல்

கறிவேப்பில்லை - 4 இலை

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1 /2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், தக்காளியை வெட்டி கொள்ளவும்.

பூண்டினை தோல் உரித்து வைக்கவும்.

புளியினை தண்ணீருடன் சேர்த்து கரைத்து வைக்கவும்.

பின்பு கரைத்து வைத்துள்ள புளி கரைசலுடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து திரும்பவும் நன்றாக கரைக்கவும்.

முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். பின்பு வெந்தயம் போட்டு பூண்டினை சேர்த்து வதக்கவும்.

அதன் பின் வெங்காயம், கறிவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைச்சலை இதில் ஊற்றி தட்டு போட்டு மூடி நன்றாக 15 நிமிடம் விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனை தேங்காய் துவையல், உருளைக்கிழங்கு, அப்பளம் போன்றவையுடன் சேர்த்து சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.