காரகுழம்பு
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டு - 1/2 கப்
தக்காளி - 3
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுந்து - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1.4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நல்லெண்ணெய் - சிறிது
வறுத்து பொடிக்க:
மல்லி விதை - 2 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம் மற்றும் பூண்டை நீளமாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டி கொள்ளவும். பொடிக்க வேண்டியதை தூளாக, நைசாக பொடிக்கவும்
இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து வெங்காயம் பூண்டை வதக்கவும்.
பிறகு தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கி மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
புளிதண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க்க விடவும், கொதிக்க ஆரம்பித்ததும் பொடித்த பொடியை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.