காய் பருப்பு குழம்பு
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 2 கைப்பிடி
பச்சை மிளகாய் - 4
பூசணிக்காய் - சிறு துண்டு
முருங்கைக்காய் - 1
சிறிய உருளைக்கிழங்கு - 1
சிறிய மாங்காய் - 1
கத்தரிக்காய் - 2
தேங்காய் துருவல் - 3/4 கப்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
பழுத்த தக்காளி - 1 (6 துண்டுகளாக நறுக்கியது)
செய்முறை:
துவரம்பருப்பை கழுவி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு விசில் வர வேக விடவும்
காய்கறிகளில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அளவாக உடையாமல் வேக விடவும்.
தேங்காயை மையாக அரைத்து விழுதாக்கவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிக்க கொடுத்துள்ளப் பொருட்களை வரிசையாக போட்டு தாளிக்கவும்.
பிறகு வேகவைத்த காய்கறிகள், பருப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து ஒரு கப் தண்ணீரும் சேர்த்து உப்பு சரிபார்த்து 2 கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.