கல்யாண பருப்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் துருவல் - 1/4 கப்

மிளகாய்வற்றல் - 2

பூண்டு - 1 பல்

சீரகம் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

மிளகாய்வற்றல் - 1

கறிவேப்பிலை - 1 இணுக்கு

செய்முறை:

துவரம்பருப்புடன் பெருங்காயம் சேர்த்து குழைய வேகவைத்து கடைந்து வைக்கவும்.

அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.

அரைத்த கலவையை வேகவைத்த பருப்புடன் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்ததும் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்த்து கிளறி மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: