கலப்பருப்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி

மிளகாய்ப் பொடி - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி

பெருங்காயப் பவுடர் - ஒரு சிட்டிகை

பூண்டு - ஒரு பல்

உப்பு - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

குக்கரில் பருப்புடன் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி மற்றும் உரித்த பூண்டு சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, பெருங்காயம் போட்டு பொரிய விட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும்.

தாளிதத்தை வெந்த பருப்பில் சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதத்துக்கான கலப்பருப்பு தயார்.

துவரம்பருப்புடன் சிறிது பாசிப்பருப்பும் சேர்த்து வேகவைக்கலாம்.

அதே போல தினசரி சமையலிலும் இந்தப் பருப்பு செய்து, சாதத்துடன் பிசைந்து, பிறகு சாம்பார், ரசம், மோர்க் குழம்பு என எல்லா வகையுடனும் சேர்த்து சாப்பிடலாம்.

குக்கரில் சாதம் வைக்கும்போதே கிண்ணத்தில் பருப்பை வேகவைத்து விடலாம்.