கறிவேப்பிலை பருப்பு குழம்பு
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - சிறிது
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
இஞ்சி - ஒரு துண்டு
மிளகாய் வற்றல் - 5
தனியா - 1/2 மேசைக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 1 1/2 தேக்கரண்டி
தேங்காய் பொடியாக நறுக்கியது - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், பூண்டை தோலுரித்து வைக்கவும். துவரம் பருப்பை நீர் விட்டு வேக வைத்து நீரோடு கரண்டியால் மசித்து வைக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காயந்ததும் உளுந்து, தனியா, மிளகாய் வற்றல், மிளகு சேர்த்து வறுக்கவும்.
சிவந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, கடைசியாக தேங்காய் சேர்த்து பிரட்டி ஆற விடவும்.
ஆறியதும் சிறிது நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். இதில் அரைத்த விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும்.
பின் வேக வைத்த பருப்பு, புளி கரைசல், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு நன்கு கொதிக்க விட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.