கறிவேப்பிலை குழம்பு (9)
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 10 கொத்து
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள் - 10 கிராம் கலந்த தூள்
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகு - 5 கிராம்
சீரகம் - 3 கிராம்
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5 பொடியாக அரிந்தது
பூண்டு - 7 பல் நசுக்கியது
வடகம் - 1 தேக்கரண்டி தாளிக்க
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் 2 நிமிடம் வதக்கவும்.
வதக்கி ஆறியதும் அம்மியில்லோ, மிக்ஸியிலோ இட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஒரு தேக்கரண்டி வடகம் போட்டு வதக்கவும்.
பின்னர் அதில் வெங்காயம் பூண்டு போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் அரைத்த விழுதுகள், மிளகாய்த்தூள், மல்லி கலந்த தூள், மஞ்சள் தூள் போட்டு கரைத்து எடுத்து வைக்கவும்.
வெங்காயம் பூண்டு வதங்கியதும் கரைத்த புளி கரைச்சலை ஊற்றி சிறிய தீயில் எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.