கறிவேப்பிலை குழம்பு (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை - 2 கைப்பிடி

துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி

கடலை பருப்பு - 1/2 மேசைக்கரண்டி

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 5 பல்

தேங்காய் துருவல் - 1/4 மூடி

காய்ந்த மிளகாய் - 5

மிளகு - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை 1 டம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும். வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, மிளகாய், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்.

கறிவேப்பிலையை வெறும் வாணலியில் நன்கு வறுத்து எடுக்கவும்.வறுத்த பருப்பு வகைகள், கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், அரைத்த மசாலா, கரைத்த புளி ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள்

போட்டு, கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: