கறிவேப்பிலை குழம்பு (6)
0
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கசகசா - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 5 பல்
வெங்காயம் - பாதி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுந்து, சீரகம், மிளகு, மிளகாய் & கசகசா எல்லாவற்றையும் சிவக்க வறுக்கவும். பிறகு சின்ன வெங்காயத்தயும் வதக்கவும்.
இதில் கறிவேப்பிலையை சேர்த்து வறுக்கவும். ஆறவைத்து அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு கரைத்த புளி சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அரைத்த மசாலா சேர்த்து எண்ணெய் மேலே வர சிறிது கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.