கறிவேப்பிலை குழம்பு (5)
தேவையான பொருட்கள்:
உதிர்த்த கறிவேப்பிலை - 2 கப்
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் - 10
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு -1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1/4 கப்
செய்முறை:
கறிவேப்பிலையை சிறிது சிறிதாக வெறும் கடாயில் மொறு மொறுப்பாக வறுத்துக்கொள்ளுங்கள்.
வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை, சிறிது எண்ணெயைக் காயவைத்து ஒன்றாக சிவக்க வறுத்து கறிவேப்பிலையுடன் சேர்த்து நன்கு பொடித்துக்கொள்ளுங்கள்.
புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் பொடித்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து புளிக்கரைசலை ஊற்றுங்கள். நன்கு கொதித்து கொட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
இட்லி, தோசை, சூடான சாதம் ஆகியவற்றுக்கு சுவையான ஜோடி.