கறிவேப்பிலை குழம்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப்

துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 6

மிளகு - 2 தேக்கரண்டி

தேங்காய் - சிறிது (விரும்பினால்)

புளி - சின்ன எலுமிச்சை அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - விரும்பினால்

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 10 பல்

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி துவரம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல் அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.

இதே கடாயில் கறிவேப்பிலையும் வறுத்து எடுக்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதில் கரைத்த புளி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

விரும்பினால் கடைசியில் தேங்காய் அரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: