கறிவேப்பிலை குழம்பு (10)
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை - 1 கப்
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
மிளகு - 2 தேக்கரண்டி
தேங்காய் - சிறிது (விரும்பினால்)
புளி - சின்ன எலுமிச்சை அளவு
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது (விரும்பினால்)
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு துவரம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு வறுத்து எடுக்கவும்.
பின் மிளகாய் வற்றல் வறுத்து எடுக்கவும்.
இதே கடாயில் கறிவேப்பிலையும் வறுத்து எடுக்கவும்.
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும்.
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
இதில் கரைத்த புளி தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள், அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
விரும்பினால் கடைசியில் தேங்காய் அரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும் எடுத்து பரிமாறவும்.