கருணை புளி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருணை கிழங்கு- 1/4 கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 1

புளி - நெல்லிக்காய் அளவு

பூண்டு - 6 பல்

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மீன் குழம்பு அல்லது புளி குழம்பு பொடி - 2 தேக்கரண்டி

வெந்தயம் - சிறிதளவு

கடுகு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து 2 கப் நீரில் கரைத்துக்கொள்ளவும்.

கருணை கிழங்கை அரைப்பதமாக அவித்து தோல் உரித்து 1 இஞ்ச் அளவுள்ளதாக நறுக்கிக்கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், கடுகு,கறிவேப்பிலை,பூடு தாளிக்கவும்

வெங்காயம்,உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

பின்னர் மிளகாய் தூள் சேர்த்து கிளறி பின் நான்காக வெட்டிய தக்காளியை சேர்க்கவும்.

எண்ணெய் பிரிந்து மேலே வந்த பின் குழம்பு பொடியை புளி நீரில் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அதில் ஊற்றவும்.

முதல் கொதி வந்ததும் கருணைகிழங்கை சேர்த்து வேகும் வரை வைத்து பின் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: