கருணைக்கிழங்கு புளிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 1

மிளகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

புளி - சிறிய எலுமிச்சை அளவு.

கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 1

மல்லிஇலை, கறிவேப்பிலை - கொஞ்சம்

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கருணைக்கிழங்கு அரிசிக்கழனியில் போட்டு கழுவி தோல் நீக்கவும், கை அரிக்காமல் இருக்கும். துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியும் நறுக்கவும்.

குக்கரில் கருணைக்கிழங்கு, வெங்காயம் பாதி, தக்காளி, மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, புளிதண்ணீர், சேர்த்து மூடி 2 விசில் வைத்து இறக்கவும். நன்றாக மசித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். மல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: