கருணைக்கிழங்கு குழம்பு (3)
0
தேவையான பொருட்கள்:
கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறு எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
கருணைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை தாளித்துக் கொள்ளவும்.
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், மல்லிப்பொடி, உப்பு போட்டு கிளறி பிறகு புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
கருணைக்கிழங்கை தோலுரித்து வட்ட வட்டமாக நறுக்கி கொதிக்கும் குழம்பில் போட்டு வற்றியவுடன் இறக்கி பரிமாறவும்.