கருணைக்கிழங்கு குழம்பு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருணைக்கிழங்கு - 500 கிராம்

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 3

மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி

புளி - ஒரு எலுமிச்சை அளவு

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

பால் - 1/2 கப்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கருணைக்கிழங்கை தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கழுவி வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருணைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதில் வெங்காயம், பச்சைமிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் வெந்தயத்தைப் போட்டு கிளறி புளிக்கரைசல், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் மிளகாய்த்தூளைச் சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க விடவும்.

மிளகாய்த்தூளின் பச்சை வாசனை அடங்கியதும் பாலைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்த பின்பு பொரித்து வைத்துள்ள கருணைக்கிழங்கினைப் போடவும்.

குழம்பு கெட்டியாக வந்ததும் கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இது சாதம், புட்டு, இடியப்பத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.