கத்திரிக்காய் தட்டப்பயறு குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் - 1 கப் (நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்)

தட்டப்பயிறு - 1 கப் (குக்கரில் வேக வைத்தது)

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

வெங்காயம் - 1/2 கப்

தக்காளி - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லித்தூள் - 1 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 1/2 கப்

கெட்டியாக கரைத்த புளி தண்ணீர் - 4 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும்.

பின் வேக வைத்த தட்டப்பயிறை தண்ணீருடன் ஊற்றவும். அதில் தேங்காய் விழுதை சேர்க்கவும்.

ஒரு கொதி வந்ததும் புளி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

பின் வேறு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து குழம்பில் கொட்டவும்.

பின் நல்லெண்ணெய், கொத்தமல்லித்தழை சிறிது சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: