கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 4 அல்லது 6
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம் - தாளிக்க
அரைக்க:
வறுத்த வேர்க்கடலை - 1 மேசைக்கரண்டி
எள் - 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி, பூண்டு பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சாம்பார் தூள் - 3 தேக்கரண்டி
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வேர்க்கடலை, எள், தேங்காயை நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள்வும்.
அரைத்தவற்றோடு வெங்காயம், இஞ்சி பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு சுற்று அரைத்து, அதில் ஊற வைத்த புளி சேர்த்து நீர் சேர்க்காமல் மீண்டும் அரைக்கவும்.
இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து அரைத்து, பின் சிறிது நீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் சேர்ப்பதால் அதிக நீர் வேண்டாம்.
கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அதே எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து பின் அரைத்த விழுது சேர்த்து பிரட்டவும்.
மசாலா நன்றாக வதங்கி எண்ணெய் பிரிய துவங்கியதும் வதக்கி எடுத்த கத்திரிக்காயைச் சேர்த்து பிரட்டி, தேவையான நீர் விட்டு தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, காய் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இது சூடான சாதம், குஸ்கா, பிரியாணி போன்றவற்றிற்கு நன்றாக இருக்கும்.