கத்திரிக்காய் காரக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 200 கிராம்

பெரிய வெங்காயம் – 1

பெரிய தக்காளி – 1

சாம்பார் பொடி – 2 மேசைக்கரண்டி

புளி – சிறிய எலுமிச்சை அளவு

கடுகு, உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

கருவேப்பிலை – சிறிது

அரைத்த தேங்காய் விழுது – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

வறுத்து பொடிக்க:

மிளகு – 1/4 தேக்கரண்டி

சீரகம் – 1/4 தேக்கரண்டி

வெந்தயம் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:

கத்திரிக்காய்,வெங்காயம்,தக்காளி மூன்றையும் நறுக்கி வைக்கவும்.

மிளகு, சீரகம், வெந்தயம் வறுத்து பொடித்து வைக்கவும்.

புளி கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும், கடுகு உளுத்தம் பருப்பு போடவும் கருவேப்பிலை சேர்த்து வெடிக்கவும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து வதக்கி மூடி விடவும்.

கத்திரிக்காய் வதங்கி வரவும், தக்காளி சேர்த்து சிறிது வதக்கவும், சாம்பார் பொடி சேர்க்கவும், நன்கு பிரட்டி விடவும், புளித்தண்ணீர் சேர்க்கவும். நன்றாக கொதித்து புளி வாடை அடங்கியதும் வறுத்து பொடித்ததை தூவவும்.

விரும்பினால் அரைத்த தேங்காய் சேர்த்து கொதி வரவும், உப்பு சரி பார்த்து சிறிது நேரம் சிம்மில் வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

தேங்காய் சேர்க்காமலும் செய்தாலும் சூப்பராக இருக்கும்.