கத்திரிக்காய் அரைச்ச குழம்பு
தேவையான பொருட்கள்:
நறுக்கிய கத்திரிக்காய் - 3
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
எண்ணெய் - 1 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் - 3
மிளகு - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
உளுந்து + கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
பட்டை - ஒரு துண்டு
லவங்கம் - 2
தேங்காய் - 5 தேக்கரண்டி
செய்முறை:
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு வறுத்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். (எல்லாம் வறுத்த பின் தேங்காய் சேர்த்து அரைக்கவும்).
பாத்திரத்தில் எண்ணெய் 1 குழிக்கரண்டி விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கத்திரிக்காய் வதங்கிய பின், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தேவையான தண்ணீர், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு பரிமாறவும்.