கத்தரிக்காய் புளிக்குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 3

சின்ன வெங்காயம் - 10

சோம்பு - 1/2 தேக்கரண்டி

தேங்காய் - அரை மூடி

சீரகம் - 1/1 தேக்கரண்டி

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

புளி - எலுமிச்சை அளவு

நல்லெண்ணெய் - 100 மில்லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை ஊற வைக்கவும். கத்தரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

சோம்பு, சின்ன வெங்காயத்தை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

சீரகம், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சோம்பு விழுதைப் போட்டு பச்சை வாடை போக வதக்கவும்.

பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, மிளகாய்த் தூள், தனியாத் தூள் சேர்க்கவும்.

குழம்பு நன்கு கொதித்தவுடன் தேங்காய் சீரக விழுதைப் போட்டு, தேவையான உப்பையும் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

எண்ணெய் தெளிந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: