கத்தரிக்காய் புளிக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சின்ன கத்தரிக்காய் - 1/4 கிலோ

பூண்டு - 100 கிராம்

கடுகு, வெந்தயம், சீரகம், உளுத்தம்பருப்பு - தலா 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

சாம்பார் பொடி - 2 1/2 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

பெருங்காய பவுடர் - 2 சிட்டிகை

புளி - பெரிய எலுமிச்சை அளவு

வெல்லம் - ஒரு சிறுத் துண்டு

நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். கத்திரிக்காயை 4 துண்டுகளாக நறுக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை பெருங்காய பவுடர் போட்டு தாளிக்கவும். பின் கத்திரிக்காய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கி புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாக வரும் போது வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சுட்ட அப்பளம் அல்லது கூழ் வடகத்துடன் பரிமாறவும்.