கத்தரிக்காய் கொத்சு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய கத்தரிக்காய் - 2

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 2

வர மிளகாய் - 5

மல்லி - 1 மேசைக்கரண்டி

கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

கடுகு, உளுந்து - தாளிக்க

ரீபைண்ட் ஆயில் - இரண்டு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கத்தரிக்காயை அடுப்பில் சுட்டு, தோலுரித்து சதையை மசித்துக் கொள்ள வேண்டும்.

வரமிளகாய், மல்லி, கடலைப் பருப்பு மூன்றையும் வறுத்து பொடிக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து தாளிக்கவும். வெடித்ததும் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு பின் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக எண்ணை பிரியும் வரை வதக்கவும்.

பிறகு கத்தரிக்காயை விழுதினை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பொடித்த பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொத்சு சிறிது கெட்டியானதும் இறக்கி கொத்தமல்லி இலை போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: