கத்தரிக்காய் குழம்பு (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 1/4 கிலோ

சிறிய வெங்காயம் - 15

மிளகாய் வற்றல் - 4

சீரகம் - 3 தேக்கரண்டி

மல்லி - 1 தேக்கரண்டி

தேங்காய் - ஒரு கீற்று

புளி - சிறு எலுமிச்சை அளவு

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காய்களை சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றல், சீரகம், மல்லி மற்றும் தேங்காய் கீற்றினை ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்.

புளியை சற்று ஊற வைத்து, கரைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த புளித் தண்ணீரில் அரைத்த மசாலாவினையும், சிறிது மஞ்சத்தூள் மற்றும் தேவையான உப்பு போட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

அதனுடன் நறுக்கிய கத்தரிக்காய்களையும் போட்டு, புளித் தண்ணீரில் கரைத்த மசாலாவினையும் ஊற்றி கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாக கொதித்து கெட்டியானவுடன் லேசானத் தீயில் வைத்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இதே முறையில் கத்தரிக்காய்க்கு பதிலாக பாகற்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், வாழைக்காய், சுண்டைக்காய், பீன்ஸ் இப்படி ஏதேனும் ஒரு காய் அல்லது இரண்டு காய்களைக் கொண்டும் குழம்பு தயாரிக்கலாம்.