கத்தரிக்காய் காரக்குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 3

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 7 பல்

புளி - சிறிய உருண்டை

தக்காளி - 2

மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி

தனியாத்தூள் - 2 தேக்கரண்டி

வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புளியை வெந்நீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பூண்டையும், தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.

கத்தரிக்காயை நீளமாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

அவை பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும். பின் கத்தரிக்காய், மிளகாய் தூள், தனியாத்தூள், சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.

பின் புளிக்கரைச்சல், உப்பு போட்டு கொதிக்கவிடவும். குழம்பு நன்கு கெட்டியானவுடன் வறுத்த வேர்க்கடலை, சிறிது எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: