கத்தரிக்காய் காரக்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் - 1/4 கிலோ

வெங்காயம் - 1/2 கப்

தக்காளி - 1/4 கப்

பூண்டு - 7 பல்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி (அல்லது) மிளகாய் தூள் + தனியா தூள் - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைபதற்கு:

தேங்காய் - 2 மேசைக்கரண்டி

தக்காளி - 1

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

துவரம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

பெருங்காயம் - தேவையான அளவு

கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

செய்முறை:

எண்ணெய் சூடானதும், தாளிக்க கொடுத்துள்ளதை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.

கத்தரிகாயை நான்காக அரிந்து தக்காளிக்கு பின் சேர்த்து வதக்கவும்.

சாம்பார் பொடி சேர்த்து ஒரு முறை பிரட்டி புளி தண்ணீர் சேர்க்கவும். தேவையானால் மேலும் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ளதை அரைத்து கொதிக்கும் குழம்பில் ஊற்றவும்.

கடைசியாக உப்பு மற்றும் அரை தேக்கரண்டி வெந்தயத்தை பொடி செய்து குழம்பில் கொட்டி கொதிக்க விடவும்.

காய்கறிகள் வெந்து எண்ணெய் மேல மிதந்ததும் தீயை அணைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: