கடலை புளிக்குழம்பு
தேவையான பொருட்கள்:
வேக வைத்த கொண்டைக்கடலை - 1 கப்
சுரைக்காய் (சதுரமாக நறுக்கியது) - 1 கப்
புளி - நெல்லிகாய் அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித் தூள் - 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 10
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு (அலங்கரிக்க)
செய்முறை:
வேக வைத்த கொண்டைக்கடலை, சதுரமாக நறுக்கிய சுரைக்காய், புளிக்கரைசல் மற்றும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்த விழுது, இவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி நறுக்கின சுரைக்காயை போட்டு வேக வைக்கவும்.
சுரைக்காய் அரைபதம் வெந்ததும் அரைத்த விழுதை ஊற்றி அதனுடன் புளிக்கரைசல், கொண்டைக்கடலை மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலா வாசனை போனதும் மற்றொரு வாணலியில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
சிறிது நேரம் அடுப்பில் வைத்திருந்து பின்னர் இறக்கி பரிமாறவும்.