கடலை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 2

பூண்டு - 10 பல்

தக்காளி - 2

அரைக்கவும்:

தேங்காய் - 1/2 மூடி

சோம்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

இஞ்சி - சிறுதுண்டு

பூண்டு - 3 பல்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

சோம்பு - 1/4 தேக்கரண்டி

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 4

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

கொண்டைக்கடலையை ஆறு மணி நேரம் ஊற வைத்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேக வைக்கவும்.

தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை, அரைத்த மசாலா விழுது சேர்க்கவும்.

நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.

சுவையான கொண்டைக்கடலை குழம்பு தயார்.

குறிப்புகள்:

இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும்.