கடலைக் குழம்பு (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஊறவைத்த கறுப்பு கொண்டைக்கடலை - 1 கப்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

நீளமாக நறுக்கின வெங்காயம் - 2

கறிவேப்பிலை - 2 கொத்து

பச்சை மிளகாய் - 3

இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

பெரிய தக்காளி - 1

பொடியாக நறுக்கிய மல்லி இலை - ஒரு கைப்பிடி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித் தூள் - 3/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

குருமிளகுத் தூள் - 3/4 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பின்னர் கொடுத்துள்ள பொடி வகைகளையும், உப்பும் சேர்த்து கிளறவும்.

ஊற வைத்த கடலையை போட்டு ஒரு கிளறு கிளறி 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் இட்டு 7 விசில் விடவும்.

பிறகு ஆவி அடங்கியதும் இறக்கி பார்த்தால் திக்கான கடலைக்குழம்பு தயாராகி இருக்கும். இது திக்காக சாப்பிட்டால் தான் சுவை.

குறிப்புகள்:

கொஞ்சம் நீர்க்க வேண்டும் என விரும்புபவர்கள் அதிலிருந்து கால் கப் கடலையை எடுத்து மிக்ஸியில் அடித்து அதிலேயே ஊற்றி தண்ணீரும் சேர்த்து கொதிக்க வைக்கவும். சுவையான கடலைக்குழம்பு ரெடி