கடலைக் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 1 கப்

பெரிய உருளைக்கிழங்கு - 1

நெத்திலிக் கருவாடு - 2 கைப்பிடி அளவு

திக்கான தேங்காய்ப்பால் - 1/2 கப்

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 2 கொத்து

புளி - நெல்லிக்காய் அளவு

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு - 1/2 தேக்கரண்டி

பட்டை - ஒரு துண்டு

கிராம்பு - 3

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணீருடன் வைக்கவும்.

நெத்திலிக் கருவாடை சுத்தம் செய்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் அரைப்பதம் வதங்கியதும், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

பிறகு நறுக்கிய உருளைக்கிழங்கு, நெத்திலிக் கருவாடு, மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.

உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் வேகவைத்த கொண்டைக்கடலையை தண்ணீருடன் சேர்த்து, புளியை அரைகப் தண்ணீரில் கரைத்து ஊற்றி வேகவிடவும்.

அனைத்தும் வெந்து குழம்பு சிறிது வற்றியதும் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சாதம், புட்டு, இடியாப்பத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.