எளிய முறை மோர்குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயிர் - 2 கப்

சீரகப் பொடி - 1 தேக்கரண்டி

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 5

பூண்டு - 3 பல்

வர மிளகாய் - 3

கடுகு & உளுந்து - தாளிக்க

கறிவேப்பிலை - ஒரு கொத்து

ரீபைண்டு ஆயில் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தயிரில் சீரகப் பொடி, உப்பு, மஞ்சள் பொடி போட்டு மிக்ஸியில் ஒரு நிமிடம் அடித்துக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டை மெலிதாக நீளமாக வெட்டிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி உளுந்து,கிள்ளிய வரமிளகாய் போட்டு சிவந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் கறிவேப்பிலை போட்டு மோரை ஊற்றவும்.

அடுப்பை சிம்மில் வைத்து நுரைத்து வந்ததும் அணைத்து பரிமாறவும். (கொதிக்க விடகூடாது)

குறிப்புகள்: