எரியுள்ளி
0
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - 2
வெள்ளரிக்காய் - 2
சௌசௌ - 1
தேங்காய் - ஒரு மூடி
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 8
புளி பெரிய - எலுமிச்சம்பழ அளவு
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
புளியை சூடான நீரில் 5 நிமிடம் போட்டு பின்னர் கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
தேங்காய்துருவல், வெந்தயம், மிளகாய் வற்றல் மூன்றையும் வறுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
புளித்தண்ணீரில் சிறிது உப்பு, மஞ்சள்தூள், கழுவிய காய்கறித் துண்டுகளைப் போட்டு கொதிக்கவிடவும்.
காய்கள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுதைக் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி போடவும்.
கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.