எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிஞ்சு கத்தரிக்காய் - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 200 கிராம்

தேங்காய் துருவல் - 1/2 மூடி

கசகசா - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 8

பூண்டு - 4 பல்

சீரகம் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு

கறிவேப்பிலை - சிறிது

வெல்லம் - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்தரிக்காயை பாதி காம்பை மட்டும் வெட்டி விட்டு, நான்காக பிளந்து தண்ணீரில் போட்டு வைக்கவும்.

புளியை 1 டம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.

வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, மிளகாய், சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

ஆறிய பின், தேங்காய், கசகசா, தனியா தூள், உப்பு சேர்த்து, நைசாக அரைக்கவும்.

கத்தரிக்காயை மெதுவாக பிளந்து அரைத்த விழுதை உள்ளே திணிக்கவும்.

மீதியுள்ள விழுதை புளிக்கரைசலில் கரைத்து வைக்கவும்.

வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, பூண்டு, கறிவேப்பிலை தாளித்து, கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

எண்ணெயிலேயே கத்தரிக்காய் பாதி வேக வேண்டும்.

புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், வெல்லம் போட்டு கொதிக்க விடவும்.

கத்தரிக்காய் வெந்து குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: