எண்ணெய் கத்தரிக்காய்
தேவையான பொருட்கள்:
பிஞ்சு கத்தரிக்காய் - 1/2 கிலோ
தேங்காய் துருவல் - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
புளி - எலுமிச்சை பழம் அளவு
முந்திரி பருப்பு - 5
எண்ணெய் - தாளிக்க , வறுக்க
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மல்லி விதை - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
கடலை,உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் - 2
பூண்டு - 5 பல்
இஞ்சி - 1 பூண்டின் அளவு
தாளிக்க:
கடுகு - சிறிது
கடலை, உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
சீரகம், வெந்தயம் - தலா 1/2 தேகரண்டி
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2
செய்முறை:
வெங்காயம், தக்காளி, பூண்டை நறுக்கிக் கொள்ளவும்.
புளியை கரைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயின் பாதிக் காம்பை மட்டும் வெட்டி நான்காக நறுக்கி தண்ணீரில் போடவும்.
வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.
பின் பாதி தக்காளி, பாதி வெங்காயத்தை போட்டு வதக்கவும்
ஆறியதும் தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து அரைக்கவும்.
பின் மீண்டும் கடாயில் 2 குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு தாளித்து, சிறிது உப்புடன் மீதமுள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
கத்தரிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
5 நிமிடம் கழித்து அரைத்த விழுதினை தூள் வகைகளுடன் சேர்த்து ஒன்று சேர பிரட்டி, நீர் தெளித்து மூடி வைக்கவும்.
பச்சை வாசம் போனதும், புளிக்கரைசலை சேர்க்கவும்.
நன்கு எண்ணெய் பிரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.