உள்ளி தீயல்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உள்ளி (சின்ன வெங்காயம்) - 10 அல்லது 15

புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு

தேங்காய் துருவியது - 1/4 கப்

காய்ந்த மிளகாய் - 7

கொத்தமல்லி விதை - 1 தேக்கரண்டி

மிளகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

வெந்தய பொடி - ஒரு சிட்டிகை

சர்க்கரை - ஒரு சிட்டிகை (தேவையென்றால்)

கருவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உள்ளியை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும். புளியை ஊறவைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.

தேங்காயை நன்கு பொன்னிறமாக ஆகும் வரை வறுக்க வேண்டும்.

மிளகாய் (5), மல்லி, மிளகு மற்றும் சீரகத்தை வாசம் வரும் வரை வறுக்க வேண்டும்.

ஆறியபின் வறுத்தவைகளை அரைத்து கொள்ளவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் (2), பெருங்காயம், வெந்தயபொடி சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய உள்ளியை சேர்த்து சிவக்க வதக்கவும். பின்பு கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு அரைத்த பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு பரிமாறவும்..

குறிப்புகள்:

சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.