உள்ளிக்கறி
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 20 அல்லது பெரிய வெங்காயம் - 2
தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி துருவல் - 1/2 தேக்கரண்டி
வெல்லம் துருவல் - 1/4 தேக்கரண்டி
புளிக்கரைசல் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
தேங்காய் துருவல் - 3/4 கப்
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
தேங்காய் துருவலை நன்கு வறுத்து அதில் கடைசியாக மல்லிப் பொடி சேர்த்து லேசாக 30 வினாடி வறுத்து ஆறவைத்து அரைத்து எடுக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நிறம் மாற வதக்கவும்.
பிறகு அதில் இஞ்சி, வெல்லம், புளிக்கரைசல், மஞ்சள் தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.
அரைத்த தேங்காய் விழுதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து மேலும் இரண்டு கொதி விட்டு இறக்கி பரிமாறவும்.