உருளைக்கிழங்கு சம்பல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4

பெரிய வெங்காயம் - 2

காய்ந்த மிளகாய் - 8

தேங்காய்ப்பால் - 1/2 கப்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் சீவி, விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும்.

வெங்காயத்தை மெல்லியதாக நீள நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.

காய்ந்த மிளகாயை கொதிக்கும் நீரில் பத்து நிமிடங்கள் போட்டு எடுத்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த மிளகாய் விழுதைப்போட்டு சிறிது வதக்கி பச்சை வாசனை போனதும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

இத்துடன், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து கிழங்கு வேகும் வரை வதக்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றி சுண்டும் வரை கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: