உருளைக்கிழங்கு குழம்பு
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
தேங்காய் - 1 மூடி
பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
உப்பு - 4 தேக்கரண்டி
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து தோலுரித்துக் கொள்ளவும்.
தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காய், கசகசா, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், சோம்பு, தக்காளி ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளையும், அரைத்து வைத்துள்ள விழுதினையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
உப்பையும் சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.