ஈஸி பூண்டு குழம்பு
தேவையான பொருட்கள்:
பூண்டு - 15 பல்
வெங்காயம் - 1 (அல்லது) சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
புளி தண்ணீர் - தேவையான அளவு (புளிப்புக்கு எட்ப)
தேங்காய் பால் - 1 கப்
கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் நறுக்கவும். எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
பூண்டு சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் தூள்கள், உப்பு சேர்த்து பிரட்டி தண்ணீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். இதில் புளி தண்ணீர் விட்டு கெட்டியாக கொதித்ததும் எடுத்து பரிமாறவும்.