ஈஸி பருப்பு குழம்பு
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பருப்பு - 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
நறுக்கிய பூண்டு - ஒரு பல்
பச்சை மிளகாய் - 2
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலை
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு குக்கரில் பருப்பு, வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
ப்ரெஷர் அடங்கியதும் திறந்து பார்த்து வெந்திருந்தால் அதில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி கிளறுங்கள். சூடாக பரிமாற சுவையாக இருக்கும்.