ஈசி காளான் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காளான் - 1 பாக்கெட்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லித் தூள் - 1 தேக்கரண்டி

கறிமசாலாத் தூள் - 1 தேக்கரண்டி

தேங்காய், முந்திரி விழுது - 1/2 கப்

தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி

பெப்பர் - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிய காளான் சேர்த்து லேசாக வதக்கவும்.

அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விட்டு மிளகாய் தூள், கொத்தமல்லித் தூள், கறிமசாலாத் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு தேங்காய், முந்திரி விழுது சேர்த்து கொதிக்க விடவும்.

அதில் தேங்காய் துருவல், பெப்பர் சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விடவும்.

கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: