ஈசி ஓமக் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - ஒரு எலுமிச்சை அளவு

வெந்தயம் - 1 தேக்கரண்டி

கடலை பருப்பு - 1 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

சிவப்பு மிளகாய் - 2 என்னம்

கறிவேப்பிலை - ஒரு இனுக்கு

பெருங்காயம் - 1 தேக்கரண்டி

ஓமம் - 2 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம்,கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, வத்தல், கறிவேப்பிலை, பெருங்காயம் , எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

இதில் ஓமத்தையும் போடவும்.

பின் புளி தண்ணீரில் மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு மூன்றையும் கலந்து வாணலியில் ஊற்றவும்.

நன்றாக கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: