இஞ்சி குழம்பு (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 50 கிராம்

மிளகாய் வற்றல் - 10

மல்லி தூள் - 7 தேக்கரண்டி

புளி - 1 சின்ன எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை - 5 கொத்து

தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 20

பூண்டு - 1 முழுசு

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

தக்காளி - 2

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி

உளுந்து - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.

பாத்திரத்தில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு முதலில் இஞ்சி போட்டு வதக்கி எடுக்கவும்.

அதே பாத்திரத்தில் மிளகாய் வற்றல் வறுத்து எடுக்கவும்.

பின் 3 கொத்து கறிவேப்பிலை போட்டு வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்.

கடைசியாக மல்லி தூள் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.

புளியை கரைத்து வைக்கவும். வெங்காயம் பூண்டு பொடியாக நறுக்கவும்.

மிச்சம் உள்ள எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

இதில் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

இதில் புளி தண்ணீர், அரைத்த இஞ்சி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து எண்ணெய் திரண்டதும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: