இஞ்சி குழம்பு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 50 கிராம்

பூண்டு - 50 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

புளி - எலுமிச்சை அளவு

மிளகாய் - தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க

நெய் - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளதை போட்டு தாளித்து பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் நறுக்கின வெங்காயம் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும்.

இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் இஞ்சி (தோல் சீவிய பின்) மற்றும் மிளகு கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

பின்னர் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து அதை வதக்கியவற்றுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

மிளகாய் தூள் பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிட்டு எண்ணெய் மேலே வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடு சாதம் இல்லை இட்லி தோசையுடன் பரிமாறவும்.