இஞ்சி குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இஞ்சி (விரல் அளவு) - 1

புளி - கோலி அளவு

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

பூண்டு - 10 பல்

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

ஆல் பர்பஸ் பொடி - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - தேவைக்கு

கொத்தமல்லித் தழை - தேவைக்கு

மிளகு - தேவைக்கு

நல்லெண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - சிறிது

சீரகம் - சிறிது

காய்ந்த மிளகாய் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உளுந்து - சிறிது

கடலைப் பருப்பு - சிறிது

ஆல் பர்பஸ் பொடிக்கு:

கடுகு - 25

கிராம் வெந்தயம் - 25

கிராம் சீரகம் - 50 கிராம்

கடலை பருப்பு - 50 கிராம்

வேர்க்கடலை - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 50 கிராம்

வெள்ளை எள் - 50 கிராம்

மிளகு தூள் - 50 கிராம்

கறிவேப்பிலை - 4 கொத்து

(காய்ந்தது) தனியா - 50 கிராம்

பெருங்காயம் - 15 கிராம்

செய்முறை:

புளியைக் கரைத்து கொள்ளவும். நல்லெண்ணெயில் மிளகு, சீரகம், 2 சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.

எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் புளி நீர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

நன்கு வெந்ததும் அரைத்த விழுது, ஆல் பர்பஸ் பொடி சேர்த்து ஒரு கொதி விடவும்.

சுவையான இஞ்சி குழம்பு தயார். கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

ஆல் பர்பஸ் பொடி:

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து கல் தூசி பார்த்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் வெறும் வாணலியில் போட்டு தீயை மிதமாக வைத்து வறுத்து ஆற வைக்கவும்.

ஆறியதும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் பெருங்காயம் சேர்த்து காற்று புகாத பாட்டிலில் வைக்கவும்.

குறிப்புகள்:

சளி, ஜுரம், உடல் அசதியாக இருக்கும் சமயத்தில் சாப்பிட ஏற்றது.

வேண்டுமெனில் காரம் குறைவாக சேர்த்துக் கொள்ளவும்.

ஆல் பர்பஸ் பொடியை குழம்பு, கூட்டு, கலந்த சாதம், சாம்பார் ஆகியவற்றிற்கு உபயோகப்படுத்தலாம் வாசமாகவும், சுவையாகவும் இருக்கும்