ஆலோவேரா குழம்பு

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சோற்றுக் கற்றாழை - 2 மடல்

சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 10 பல்

புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சோற்றுக் கற்றாழை மடலை மண் போக கழுவி, மேல் தோலை மட்டும் சீவி எடுக்கவும்.

உள்ளே ஜெல் போல இருப்பதை பட்டாணி அளவுக்கு பொடியாக நறுக்கி வைக்கவும்.

புளியை ஒன்றரை தம்ளர் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டி வைக்கவும்.

வெங்காயம், பூண்டை உரித்து இரண்டாக நறுக்கி வைக்கவும்.

தேங்காய்த்துருவலை மிக்ஸியில் நைசாக அரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கட்லைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கி வைத்த கற்றாழையை சேர்த்து வதக்கவும்.

வதக்கும் போதே கற்றாழை காணாதது போல் கரைந்து விடும்.

புளிக்கரைசல், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

கொதிக்கும் போது அரைத்த தேங்காயை சேர்த்து கொதிக்க விடவும்.

சீரகம், மிளகை வெறும் வாணலியில் வறுத்து நைசாக பொடித்து குழம்பில் சேர்க்கவும். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வருவது போல் வரும் போது இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: