ஆலு வெண்டை குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 5

உருளைகிழங்கு - 1

புளி - எலுமிச்சை அளவு

தக்காளி - 1

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 4

காயந்தமிளகாய் - 2

மஞ்சள்தூள் - சிட்டிகை

தேங்காய்ப்பால் பவுடர் - 1 மேசைக்கரண்டி

தாளிக்க:

கடுகு, வெந்தயம்,சீரகம் ,நல்லெண்ணெய், கறிவைப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் வெண்டைக்காயையும் உருளைக்கிழங்கையும் கழுவி டைமண்ட் வடிவில் நறுக்கவும்.

வெங்காயத்தயும்,தக்காளியையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.

புளியை அரிசி கழுவிய நீரில் கரைத்து வைக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,வெந்தயம் ,சீரகம்,கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாகும்வரை சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.

பின் தக்காளியை குழையும்வரை வதக்கிபின் வெண்டைக்காய் மற்றும் உருளைகிழங்கை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.

பின் புளிக்கரைசல் ஊற்றி ,உப்பு,மஞ்சள்த்தூள் சேர்க்கவும்.

நன்றாக காய் வெந்து குழம்பு கெட்டியாகும்வரை கொதிக்கவிடவும்.

பின் இறக்குமுன் தேங்காய்ப்பால் பவுடரை வெந்நீரில் கலக்கி ஊற்றி அடுப்பை நிறுத்தி அதே சூட்டில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். பிறகு பரிமாறவும்.

குறிப்புகள்: